ஒரு நடிகரின் பெயரை சொன்னால் ! ரசிகர்களின் கரகோசத்தால் ! இந்த பூமியே அதிரும் என்றால் ! அது தான் இவரின் பெயர் இவரின் ஒவ்வொரு அசைவுக்கு பின்னால் ! விசில் சத்தமும் வெடி சத்தம் என்று கைதட்டல்கள் விண்ணை பிளக்கும் என்றால் ! அது தான் இவருக்கான அடையாளம் ! தல என்கிற ஒரு சொல் பல லட்சம் ரசிகர்களால் கொண்டாட படுவது என்றால் ! அது தான் இவர் திறமைக்கான அங்கீகாரம் ! இவரின் பெயரை இதயத்தில் சுமக்காத ரசிகர்களே இல்லை !! இவரின் புகழுக்கு அந்த வானம் தான் எல்லை ! ஈடு இணையில்லா ரசிகர்களின் நாயகன்……………. தல...
 
Picture
தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே ரிலீஸ் ஆனதால் இந்த தீபாவளி “தல” தீபாவளிதான் என்று கொண்டாடக் காத்திருந்த அஜித்தின் ரசிகர்களுக்கு நிஜமாகவே தல தீபாவளிதான்…

சென்னையிலிருந்து மும்பைக்கு இண்டர்வியூக்கு வரும் ஆர்யா அதே விமானத்தில் ஆர்யாவின் தோழியான நயன்தாரா இருவரும் மும்பைக்கு வருகின்றனர் இவர்களுடன் சக பயணியாக அஜித்தும் அதே விமானத்தில் வருகிறார். வந்த இடத்தில் நயன்தாராவை சில மர்ம நபர்கள் கடத்த முயல அவர்களிடம் இருந்து நயன்தாராவை காப்பாற்ற முயல்கிறார். ஆனால் இவர்கள் இருவரையும் அந்த மர்ம கும்பல் கடத்தி விடுகிறது. கடத்தியது யார், எதற்காக என்று சிக்கும்போதே எண்ட்ரி ஆகிறார் அஜித். நயன்தாராவை பணயக் கைதியாக வைத்துக்கொண்டு ஆர்யாவிடம் பேரம் பேச, தன் தோழியை காப்பாற்ற வேண்டும் என்று, அஜித் சொல்லும் வேலையை முடித்து தர ஒப்புக்கொள்கிறார். பின் அடுத்தடுத்து நடக்கும்
திருப்பங்களை மிக சுவாரஸ்யமாக காட்டியுள்ளார் விஷ்ணுவர்தன்.

நயன்தாரா அஜித்தின் கூட்டாளிதான் எனத் தெரிந்ததும் அதிர்ச்சிக்குள்ளாகி போலிஸிடம் போக துடிக்கிறார் ஆர்யா. ஆனால் ஆர்யாவின் காதலி டாப்சியையும் நம்பவைத்து தனது பாதுகாப்பில் வைத்துக்கொள்கிறார் அஜித். மேலும் அவரை வைத்து ஹேக்கிங்கில் தேர்ந்தவரான ஆர்யாவை மிரட்டி காரியம் சாதித்துக்கொள்கிறார். இதன் மூலம் மும்பையின் முன்னணி டிவி தொலைக்காட்சியின் சாட்லைட் சிக்னலை கட் செய்கிறார் ஆர்யா. அஜித் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் என்று குழப்பத்தில் இருக்கும் நமக்கு இடைவெளிக்குப் பின் தான் தெளிவு கிடைக்கிறது.

அதிகார வர்க்கத்தில் மேலோங்கி இருக்கும் சிலர் பணத்துக்காக ஆசைப்பட்டு செய்யும் ஊழலால் தன் உயிர் நண்பனான ராணாவை இழக்கிறார். இதற்கு காரணமாக இருந்தவர்களை கண்டுபிடிக்கும் அவர். அந்த ஊழலே ஹோம் மினிஸ்டரால் தான் நடந்ததது எனத் தெரிந்ததும் கொஞ்சமும் பதப்படாமல் தன் நண்பனின் மரணத்துக்கு காரணமானவர்களை அம்பலப்படுத்துவதோடு பணத்துக்காக பயங்கரவாதத்துக்குத் துணைபோகும் அவர்களின் மற்றொரு திட்டத்தையும் தகர்ப்பதே மீதிக்கதை…

படத்திற்கு பெரிய தூணாக நிற்பவர் அஜித்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒன் மேன் ஆர்மியாக கலக்கியிருக்கிறார். அஜித்துக்கு வசனங்கள் அதிகமாக இல்லையென்றாலும் அவர் வரும் காட்சிகள் ஆக்சன் தான். சாஃப்ட்வேர் இன்ஜினியராக ஆர்யா துறு துறு நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதை திறன்பட செய்திருக்கிறார் ராணா டகுபதி, படத்தில் காமெடி இல்லையென்றாலும் வில்லன் மகேஷ் மஞ்ஜுரேக்கர் கிளைமேக்சில் பேசும் வசனங்கள் நகைச்சுவக்கு உத்திரவாதம் பாஸ்…

யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களில் “ஆரம்பமே” மற்றும் “என் ஃப்யூஸ் போச்சே” பாடல்கள் தவிர மற்றவை மனதில் நிற்கவில்லை. ஆனால் அதற்கு இணையாக பின்னணியில் பலம் சேர்த்திருக்கிறார்.

ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ் பாடல் காட்சியானாலும் சரி, சண்டைக் காட்சியானாலும் சரி அதில் ஒரு பிரம்மாண்டத்தை அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார். மும்பையை அதன் இயல்பு மாறாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஒரு ஹாலிவுட் படம்போல ஆரம்பம் முதல் இறுதிவரை பரபரப்பாக நகர்கிறது திரைக்கதை, அஜித்தின் பஞ்ச் டயலாக் “சாவுக்கு பயந்தவன் தான் ஒவ்வொரு நாளும் சாவான், பயப்படதாவன் ஒரு தடவைதான் சாவான்”…

இறுதியில் படத்தை இரண்டாம் பாகம் எடுக்கப்போவது போல காட்சி அமைத்திருக்கிறார்கள், ஒருவேளை அடுத்த பாகத்தையும் எடுக்க ரெடி ஆயிட்டாங்களோ…

ஆக இந்த தீபாவளி தீவிர அஜித் ரசிகர்களுக்கு செம விருந்துதான்


 
 
 
 
 
 
Picture

 
 
Picture
சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க அஜீத்துடன் நடிக்க பேசி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த மெகா ஹிட் படம் சந்திரமுகி. தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படம் இதுவே.

பி.வாசு இயக்க, சிவாஜி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. தெலுங்கு, மலையாளம், இந்தியிலும் இந்தப் படம் வெளியானது.

தற்போது சந்திரமுகியின் 2-ம் பாகத்தை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதில் நடிக்க மாட்டேன் என ஏற்கெனவே ரஜினி கூறியிருந்தார்.

இந்த நிலையில் ரஜினி வேடத்தில் நடிக்க அஜீத்திடம் பேசி வருகிறார்களாம்.

சந்திரமுகி படம் கன்னடத்தில் வெளியாகி சக்கைப் போடு போட்ட ஆப்தமித்ராவின் ரீமேக். இதன் அடுத்த பகுதியை ஆப்தரக்ஷகா என உருவாக்கினார் வாசு. இந்தப் படத்தைத்தான் ரீமேக் செய்யப் போகிறார்களா.. அல்லது அது வேறு கதையா என்பது தெரியவில்லை.

பி வாசு இயக்கத்தில் ஏற்கெனவே பரமசிவன் படத்தில் நடித்திருந்தார் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது.

Courtesy : One India


 
 
Picture
ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் படத்தில் சம்பளம் வாங்காமல் சிறு வேடத்தில் நடித்தார் அஜீத். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் படம் இங்கிலீஷ் விங்கிலீஷ். கவுரி ஷிண்டே இயக்குகிறார். இதில் நீண்ட இடைவெளிக்கு பின் ஸ்ரீதேவி ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி படத்தில் கவுரவ வேடத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். தமிழில் இந்த வேடத்துக்கு ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என பட தயாரிப்பாளரான பால்கி விரும்பினார். ஆனால் சில காரணங்களால் இதில் ரஜினி நடிக்கவில்லை. 

இந¢நிலையில் அஜீத்திடம் நடிக்க கேட்டனர். விஷ்ணுவர்தன் பட ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால் அவர் நடிப்பது முடிவாகாமல் இருந்தது. இந்நிலையில் அப்பட ஷூட்டிங்கிலிருந்து பிரேக் எடுத்த அஜீத், திடீரென இங்கிலீஷ் விங்கிலீஷ் இயக்குனர் கவுரியை தொடர்புகொண்டு, குறிப்பிட்ட நாளில் நடிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து பட யூனிட் ஷூட்டிங்கிற்கு தயாரானது. வழக்கம்போல் தனது நிஜ ஹேர் ஸ்டைலுடன் மூக்கு கண்ணாடி மட்டும் போட்டுக்கொண்டு ஸ்ரீதேவியுடன் அவர் நடித்தார். 

ஒரே நாளில் ஷூட்டிங் முடிப்பதாக திட்டமிட்டிருந்தனர். ஆனால் சில காரணங்களால் தாமதமானது. முதல் நாள் 6 மணி நேரம் நடித்து கொடுத்த அஜீத், மறுநாள் அதேபோல் 6 மணி நேர ஷூட்டிங்கில் பங்கேற்றார். சம்பளம் பற்றி பால்கி கேட்டபோது, அன்பாக மறுத்துவிட்டார் அஜீத். நான் ஸ்ரீதேவியின் தீவிர ரசிகன். அவருக்காகவே இதில் நடித்தேன். சம்பளம் எதுவும் வேண்டாம் என அவர் கூறியதாக பட வட்டாரங்கள் தெரிவித்தன. 


Courtesy: isaithendral

 
 
 
 
Picture
Ajith Keeps Up His Word ; Vishnuvardhan Delighted Our sincere thanks to Director Vishnuvardhan for the images.

Ajith kumar had promised director  Vishnuvardhan  a  new look when he met him 15 days back , Vishnu  was surprised to  find  Ajith much stronger and fitter than the last time he  saw him….the director of the  “un titled” project of Ajith and Arya goes praising Ajith kumar 

“ He is very  dedicated  ….surprised to  know that even after completing twenty years in the film industry…his dedication is unmatched …six hours a day in a gym is no mean achievement for a man who had undergone 13 surgeries …can match the intensity of  his  commitment each time  I see him he surprises  me … his  fans can feel proud  and   our unit is proud too”

Here are the few “muscle tight” shots of Ajith kumar shot by Vishnuvardhan himself in Mumbai before the commencement of the Mumbai schedule…


 
 
Picture
தமிழ் திரையுலகின் முக்கியமானவர்கள் பட்டியலில் இருப்பவர் அஜீத். பஸ்ஸில் கண்டக்டராக இருந்து நடிகரான ரஜினியை அடுத்து தனது சொந்த முயற்சியில் வெற்றியும் தோல்விகளையும் ஒரு சேர பார்த்தவர் அஜீத்.

இன்றும் எனது விருப்பதற்காக எனது ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் என தனது நற்பணி மன்றங்களை எல்லாம் களைத்து விட்டு இன்றும் தான் உண்டு தனக்கு பிடித்த சினிமா உண்டு என்று ஒதுங்கி வாழ்பவர்,அவரை பற்றிய 41 துளிகள் இங்கே…

தெலுங்கு படமான பிரேம புஸ்தகம் மூலம் திரையுலகிற்கு (1992) அறிமுகம் ஆனார்.
தமிழில் ‘அமராவதி’ என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார். அத்திரைப்படத்தை அடுத்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே என பல படங்களில் நடித்தார்.

தனக்கு எதிர்பார்த்த வெற்றி இல்லையே என தவித்தவர்க்கு ‘ஆசை’ என்ற படத்தின் மூலம் வெற்றியை கொடுத்தவர் வஸந்த். அந்த படத்தை தயாரித்தவர் மணி ரத்னம்.அடுத்தடுத்து பல படங்களில் நடித்தாலும் காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்களின் வெற்றியால் முன்னணி கதாநாயகனாக வலம் வர தொடங்கினார்.1998ம் ஆண்டு வெளிவந்த ‘காதல் மன்னன்’ என்ற படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.

அமர்க்களம் படப்பிடிப்பில் ஏற்பட்ட காதலால் ஷாலினியை 2000-ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். நட்சத்திரத் தம்பதியினருக்கு வாரிசு ‘அனோஷ்கா’ என்ற குட்டி தேவதை.

தனது பெயருக்கும் முன்னால் எந்த பெயரையும் போட விரும்ப மாட்டார். ஆனால் அமர்க்களம் படத்தில் ‘அல்டிமேட் ஸ்டார்’ என்ற பட்டத்தை கொடுத்தவர் சரண். அடுத்து சரண் இயக்கிய ‘அசல்’ படத்தில் பட்டம் எதுவும் போட வேண்டாம் என அஜீத்தே நீக்க சொல்லிவிட்டார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வந்த வெற்றிப்படம் ‘தீனா’. படத்தில் ” தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது.. நீ ஆடு தலை.. ” என்று வசனம் வரும். அன்று முதல் ரசிகர்களுக்கும் ‘தல’ ஆனார் அஜீத்.அவரது சினிமா வாழ்க்கையில் சர்ச்சைகளும் விடவில்லை. நியூ, மிரட்டல், நான் கடவுள், ஏறுமுகம் என பல படங்கள் இவர் கமிட் ஆகிவிட்டு கருத்து வேறுபாடால் நடிக்க முடியாது என்று கூறி விட்டார்.

வாலி, வில்லன், வரலாறு போன்ற படங்களில் இரண்டு/மூன்று வேடங்களில் நடித்தார். அப்படி நடித்த படங்கள் எல்லாம் ஹிட்.! ஆனந்தப் பூங்காற்றே, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், நீ வருவாய் என போன்ற படங்களில் கௌரவ வேடத்திலும் நடித்திருக்கிறார்.

மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். அதனாலேயே பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து விடுவார். சமீபத்தில் கலந்து கொண்ட ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’ என்ற நிகழ்ச்சியில் ” ஐயா.. அடிக்கடி ஏதாவது நிகழ்ச்சினு மிரட்டி வர சொல்றாங்கய்யா.. ” என்று மேடையில் முதல்வர் கருணாநிதியிடமே முறையிட்டார். அஜீத் பேச்சிற்கு மேடையில் இருந்த ரஜினி எழுந்து நின்று கை தட்டினார்.

இன்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நெருக்கமானவர் அஜீத். ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக்கில் அஜீத் தான் நடிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தவர் ரஜினி.
கல்யாணத்திற்கு முன்பு புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர். கல்யாணம் ஆனவுடன் தனது மனைவிக்காக சிகரெட்டை விட்டொழித்தார்.
சிம்பு, ஜீவா, ஆர்யா என தமிழ் திரையுலகின் அடுத்த தலைமுறை நாயகர்கள் ஃபேவரைட் எப்போதும் அஜீத் தான். அதிலும் சிம்பு ஒரு அஜீத் வெறியர்.
பல நாயகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு நாயகியாக இவர் தான் வேண்டும் என்று சிபாரிசு செய்வார்கள். ஆனால் அஜீத் எப்போதும் நாயகி விஷயத்தில் தலையிடுவது இல்லை.

‘நேருக்கு நேர் படத்தில் அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்தனர். இருந்தாலும், கருத்து வேறுபாடு காரணமாக அஜீத் படத்திலிருந்து விலக, சரவணன் என்ற இளைஞரை அஜீத் நடித்த வேடத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் வஸந்த். சரவணனுக்கு சினிமாவுக்காக சூட்டப்பட்ட பெயர் சூர்யா.அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்த ஒரே படம் ‘ராஜாவின் பார்வையிலே’. அதன் பிறகு இருவருக்கும் என தனித்தனியாக ரசிகர்கள் கூட்டம் சேர, இணைந்து நடிப்பதைத் தவிர்த்தனர். இருவரும் தொழில்முறையில் போட்டியாளர்கள் என ஆகிவிட, அவர்களது ரசிகர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். ‘மங்காத்தா’ படப்பிடிப்பில் விஜய்யும் அஜீத்தும் சந்தித்து கொண்டதிலிருந்து இன்றும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

சுப நிகழ்ச்சிகளுக்கு போகிறாரோ இல்லையோ துக்க நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வார். சமீபத்தில் பாடகி சித்ராவின் குழந்தை நந்தனா இறந்ததற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.தனது 50வது படமான மங்காத்தாவில் ஜார்ஜ் க்லூனி போன்ற கெட்டப்பில் நடித்தார். வாலி, வரலாறு என தான் கதாநாயகனாக நடித்த படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தாலும், மங்காத்தா படத்தில் நடித்தது நெகட்டிவ் ரோலில் மட்டுமே.

சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அஜீத் ரசிகர்கள் சிலர் கூறவே ” எனது பெயரை தவறாக உபயோகித்தால் ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவேன்” என்று எச்சரித்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் இவரது பெயர் தவறாக உபயோகப்படுத்தப்படவே தனது அனைத்து ரசிகர் மன்றங்களையும் கலைத்து விட்டார் அஜீத்.

அஜீத் ரசிகர் மன்ற கலைப்புக்கு கூறும் காரணம் ” மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகருக்கும் அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!”

தீவிரமான சாய்பாபா பக்தர். கார், பைக் என எந்தப் பொருள் வாங்கினாலும் பாபாவுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுதான் பயன்படுத்துவார்!
வெளி இடங்களில் தண்ணீர், பழரசம் போன்றவற்றை அருந்த வேண்டியிருந்தால், இடது கையால் தான் கிளாஸைப் பிடித்துக் கொள்வார். பெரும்பாலான வலது கைக்காரர்கள் பயன்படுத்தியபோது உதடுகள் பட்ட பகுதியைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை!

சினிமாவில் நடிப்பதற்கு முன் வேலை பார்த்த ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தின் நிலவரங்களை இப்போதும் அடிக்கடி அப்டேட் செய்துகொள்கிறார்!
வீடு, அலுவலகம் என எங்கு ரசிகர்களைச் சந்தித்தாலும், ‘உங்க குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. மன்றப் பணிகளை நேரம் இருந்தா பார்த்துக்கலாம்!’ எனப் பாசமாக வலியுறுத்துவார்!

உள்ளூர் அரசியல் பற்றித்தான் கருத்துச் சொல்ல மாட்டார். ஆனால், உலக அரசியலின் இன்றைய நிலவரம்பற்றி எந்த நிமிடமும் அவரிடம் பேச, விவாதிக்க அவ்வளவு விஷயம் இருக்கும்!

சாய்பாபாவுக்குப் பிறகு அஜீத்துக்குப் பிடித்த தெய்வம் திருப்பதி வெங்கடாஜலபதி. சென்னையில் இருந்தே இதுவரை இரண்டு தடவை நடந்தே சென்று திருப்பதி சாமி தரிசனம் செய்திருக்கிறார்!ரேஸ் போட்டிகளில் அஜீத்துக்கு ரோல் மாடல் பிரபல ரேசர் அயர்டன் சென்னா. அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதிதான் அயர்டன் ஒரு கார் விபத்தில் இறந்தார். அதை நினைத்து தன் பிறந்த நாளன்றும் உருகி வருந்துவார் அஜீத்!

ரசிகர்களின் திருமணங்களுக்குத் தன்னுடைய பெயர், படம் போட்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள் அடிப்பதை விரும்பவே மாட்டார். ‘கல்யாணம் ரொம்ப பெர்சனல் விஷயம்ல!’ என்பார்!தனது மொபைல் போனில் குழந்தை அனோஷ்கா பிறந்ததில் இருந்து இப்போது வரை நடப்பது, பேசுவது, ஓடுவது, சிரிப்பது என எல்லாமே குட்டிக் குட்டி வீடியோ கிளிப்பிங்குகளாக இருக்கின்றன. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவற்றைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பார்!
‘இது நான் பேச உங்களுக்கு உகந்த நேரமா?’ என கேட்டுவிட்டுத்தான் தொலைபேசி, அலைபேசிகளில் பேச ஆரம்பிப்பார்!

பொதுவாக, சுயசரிதை நூல்கள் வாசிப்பது பிடிக்கும். ரஜினி பரிசளித்த ‘ஹிமாலயன் மாஸ்டர்ஸ்’ புத்தகத்தை அடிக்கடி வாசிப்பார். வீட்டில் மினி நூலகமே உண்டு!
அஜீத்தின் விமான ஆசை கிளை விரித்தது ஆசான் மெமோரியல் பள்ளியில். அங்கே அவர் பாடமாகப் படித்த ஏரோ மாடலிங்தான் இன்றைய ரிமோட் விமானம், பைலட் அசோசியேஷன் நடவடிக்கைகள் வரை வளர்ந்து நிற்கிறது!
உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார், சிக்கன் பிரியாணி சமைப்பதில் எக்ஸ்பர்ட். சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருப்பதாகத் தெரிந்தால், நண்பர்கள் வீட்டில் குவிந்து, பிரியாணி சமைக்கச் சொல்லி அஜீத்தை வம்பிழுப்பார்கள்!
எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் புதுவித உணவு வகைகளாக ஆர்டர் செய்வார். அந்த உணவு அருமையாக இருந்தால், அதைத் தயாரித்தவர்களை நேரில் அழைத்துப் பாராட்டித் தள்ளிவிடுவார்!

படிக்கிற காலத்தில் தீவிர கிரிக்கெட் பிரியர். ஆனால், இப்போது ‘கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் எல்லா விளையாட்டுகளுக்கும் தேவை’ என்கிறார்!
மனித முகங்களைப் படம் பிடிப்பதில் கேமராமேன் அஜீத்துக்கு அத்தனை ஆர்வம். நண்பர்களின் கேமரா பழுதடைந்தால் பைசா செலவில்லாமல் ரிப்பேர் சரி செய்து தரும் அளவுக்கு கேமராக் காதலர் இவர்!
அனோஷ்கா, தந்தையை ‘அஜீத் குமார்’ என்றுதான் அழைப்பாள். அப்படி ஒவ்வொரு முறை அனோஷ்கா அழைக்கும்போதும் பூரிப்பில் முகம் இன்னும் சிவக்கும் அஜீத்துக்கு!

மினியேச்சர் ஹெல்மெட்களைச் சேகரிப்பது அஜீத்தின் பொழுதுபோக்கு. விதவித நாணயங்கள், தபால் தலைகளைக் காட்டிலும் அபூர்வமான கலெக்ஷன்ஸ் இது!
தான் நடித்த படம் ரிலீஸ் ஆன பிறகு ரிசல்ட் கேட்டு அதைப்பற்றிய விமர்சனத்தில் ஈடுபடவே மாட்டார் அஜீத். ‘சந்தைக்கு வந்திருச்சு. இனி ரசிகர்கள்தான் தீர்மானிக்கணும். நம்ம பங்கு முடிஞ்சுபோச்சு!’ என்பார்!

தங்களது படம் வெளியாகும்போது படத்துக்கான பப்ளிசிட்டிக்கு பல நடிகர்கள் ஊர் ஊராக செல்லும் நிலையில், ‘மங்காத்தா’ படத்திலிருந்து என் படம் குறித்து எதுவும் பேசக்கூடாது என முடிவு செய்திருக்கிறேன்..” என படம் குறித்து பேச திடமாக மறுத்திருக்கிறார். 


 
 
http://massajith.weebly.com/
Congratulations Thala !!!

http://massajith.weebly.com/

 

  Author

  This is not official site of Actor Ajith Kumar. This is a fan site. This site contains no ads and hence no revenue generated. 

  Archives

  October 2013
  September 2013
  November 2012
  October 2012
  September 2012
  August 2012
  July 2012

  Categories

  All
  Massajith


This is not official site of Actor Ajith Kumar. This is a fan site. This site contains no ads and hence no revenue generated.